எதிர்வரும் இரு வாரங்களுக்குள் மருந்து பொருட்களின் விலைகளில் மாற்றம் ஏற்படுத்தப்படும் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றிற்கு கருத்துரைத்த போதே அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல இதனை தெரிவித்தார்.
இதேவேளை மருந்து பொருட்களின் விலையானது தற்போது அதிகரித்து காணப்படுகின்றது என்பதனை மறுக்க முடியாது,
எவ்வாறாயினும் தற்போது காணப்படுகின்ற விலைகள் விரைவில் மாற்றம் ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.




Discussion about this post