தேர்தல் முறை திருத்தம் தொடர்பில் தெரிவுக்குழுவொன்றை நியமிக்க வேண்டும் என்ற பிரேரணை தேர்தலை தாமதப்படுத்தும் மற்றொரு முயற்சி என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அவர் மேலும்தெரிவிக்கையில், இதற்கு முன்னர் நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழு ஏற்கனவே தனது அறிக்கையை வழங்கியுள்ள நிலையில், இன்னுமொரு பாராளுமன்ற தெரிவுக்குழுவை ஸ்தாபிக்குமாறு கோரி நீதியமைச்சர் கடிதம் அனுப்பியுள்ளது. இது தேர்தலை ஒத்திவைக்கும் சூழ்ச்சியாகவே உள்ளது.
ஏற்கனவே, மாகாண சபைத் தேர்தல்கள் பல வருடங்களாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன. உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. இந்நிலையில் தற்போதைய பாராளுமன்றத்தையும் கலைத்து உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும். தேர்தல் முறைமையை திருத்துவதற்கு பாராளுமன்ற தெரிவுக்குழுவை நியமிக்குமாறு நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ச, பாராளுமன்ற சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.











Discussion about this post