அம்பாறை மாரிகம பகுதியில் சட்டவிரோதமாக 6 1/2 அடி உயரமான கஞ்சா செடியைப் பயிரிட்ட நபரைப் பொலிஸார் நேற்று(26) கைது செய்துள்ளனர்.
உஹன பொலிஸ் புலனாய்வுப்பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற ரகசியத் தகவலையடுத்தே இக்கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த கஞ்சாச் செடி பொலிஸாரினால் அழிக்கப்பட்டுள்ள நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.






Discussion about this post