மெகசின் சிறைச்சாலையில் கைதி உயிரிழப்பு – இரு அதிகாரிகள் கைது!
கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் கைதியொருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஜெயிலர் ஒருவரும் பெண் பாதுகாவலர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று இரண்டு கைதிகள் சிறை அறைகளை விட்டு வெளியேறி தப்பிச்செல்ல முற்பட்டபோது அதனைத் தடுக்க சிறைக் காவலர் ஒருவர் முயற்சித்துள்ளார்.
இதன்போது நடந்த சம்பவத்தில் இரு கைதிகளும் சிறை அதிகாரி ஒருவரும் காயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அவர்களுள் ஒரு கைதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 38 வயதான கைதியே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.
சம்பவம் தொடர்பாக பொரளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





Discussion about this post