10 இலட்சம் அஞ்சல் பொருட்களை விநியோகிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்க முன்னணியின் இணைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.
தபால் ஊழியர்களால் கடந்த 48 மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்பு காரணமாக 10 இலட்சம் அஞ்சல் பொருட்கள் தேங்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அஞ்சல் தொழிற்சங்கங்கள் முன்னெடுத்திருந்த 48 மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்பு முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
நுவரெலியா மற்றும் கண்டி அஞ்சல் அலுவலகங்களை தனியார் தரப்பினருக்கு வழங்கும் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அஞ்சல் தொழிற்சங்கங்கள் கடந்த 8 ஆம் திகதி முதல் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





Discussion about this post