Saturday, April 11, 2026
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
No Result
View All Result
  • தமிழ்
  • සිංහල
  • English
Home இலங்கை

பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட்ட நபர் மூன்று நாட்களுக்குப் பின்னர் வீட்டுக்கு வந்ததால் பரபரப்பு கம்பளை பிரதேச சம்பவம்.

by editor
November 28, 2023
in இலங்கை
0 0
A A
0
இலங்கையில் பல ஆண்டுகளுக்குப் பின்னர் பதிவான மரணம்..!
Share on FacebookShare on Twitter

பிரேத பரிசோதனை செய்யப்பட்டு சடலம் புதைக்கப்பட்ட மூன்று நாட்களுக்குப் பின்னர், மரணமானவர் அவரது தாயார் மற்றும் உறவினர்களுடன்
வைத்தியசாலைக்கு வந்து மரண விசாரணை அதிகாரி ஏ.நளின் முன்னிலையில் ஆஜரான சம்பவம் தொடர்பில் கம்பளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

லங்காதீப நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில், இந்த செய்தி பின்வருமாறு.

இரண்டு மாதங்களுக்கு முன்னர் கம்பளை பேருந்து நிலையத்தில் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

அடையாளம் காண முடியாத நிலையில் சடலம் சுமார் இரண்டு மாதங்களாக கம்பளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்தது.

இதேவேளை, அவரது உறவினர்கள் குழுவொன்றை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளதுடன், அவர்கள் உடஹெந்தென்ன, மேரிவில தோட்டத்தின் கீழ் பகுதியில் வசிப்பவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

அதன்படி, உயிரிழந்தவரின் தாய் மற்றும் சகோதரர் உள்ளிட்ட குழுவினர் கம்பளை வைத்தியசாலைக்கு வந்து சடலத்தை அடையாளம் கண்டுள்ளதுடன் உயிரிழந்தவர் தனது 59 வயதுடைய லாசர் மைக்கல் என்ற எனது மகன் எனவும் தாய் தெரிவித்துள்ளார்.

சகோதரர் மற்றும் உறவினர்கள் சடலத்தை அடையாளம் கண்டதையடுத்து, மரண விசாரணை அதிகாரி ஏ . நளின் சடலத்தை கையளித்த உடன் இறந்தவரின் உறவினர் உள்ளிட்ட குழுவினர் சடலத்தை மேரிவில தோட்டப் பகுதிக்கு எடுத்துச் சென்று மத அனுஷ்டானங்களை மேற்கொண்டு இரண்டு நாட்களுக்குப் பின்னர் புதைத்துள்ளனர்.

இந்நிலையில் இறந்துவிட்டதாகக் கூறியவர், சம்பவம் நடந்து மூன்று நாட்களுக்குப் பிறகு வீட்டுக்கு வந்து, “அம்மா நான் வீட்டுக்கு வந்துட்டேன்” என்று கூறிய படி வீட்டுக்குள் வந்தநிலையில், நீ செத்துவிட்டாய்” என்று வீட்டில் உள்ளவர்கள் கூறி சத்தமிட்டு உள்ளனர்.

நீ கம்பளை நகரில் வைத்து செத்து விட்டாய் அதனால் வீட்டில் கொண்டு வந்து புதைத்தோம் என அவருக்கு விளக்கி உள்ளனர்.

அதற்கு அவர் “இல்லை அம்மா நான் கம்பளைக்கு செல்லவில்லை.

நான் நாவலப்பிட்டிக்கு சென்று இருந்தேன் என்று கூறியதால் தாய், சகோதரர் மற்றும் உறவினர்கள் இறந்தவரை அழைத்து கொண்டு மரண விசாரணை அதிகாரியை சந்தித்தனர்.

மரண வீட்டிற்கு சுமார் எழுபதாயிரம் ரூபாய் செலவாகியதாகவும் மரண விசாரணை அதிகாரி முன்னிலையில் சம்பவம் விவரிக்கப்பட்டது.

மரண விசாரணை அதிகாரியின் அறிவித்தலின் அடிப்படையில் கம்பளை பொலிஸார் புதைக்கப்பட்ட நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

உயிரிழந்த லாசர் மைக்கல் இரண்டு பிள்ளைகளின் தந்தை என்பதுடன் அவரது மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றுள்ளார்.

அதன் பிறகு அவர் தனது குழந்தைகளின் வீடுகளிலும், அந்த வீடுகளுக்கு வெளியேயும் பல்வேறு வேலைகளைச் செய்து வந்தார்.

அண்மைக்காலமாக நாவலப்பிட்டியில் உள்ள தனது மகளின் வீட்டில் தங்கியிருந்த அவர், நாவலப்பிட்டியில் அதிக நேரத்தைக் கழித்ததால், நீண்ட நாட்களாக மகளின் வீட்டுக்குச் செல்லவில்லை.

இறுதியாக, மூன்று மாதங்களுக்கு முன்னர் கம்பளை நகரத்தில் அவரைப் பார்த்ததாகவும் அவரின் சகோதரர் மரண விசாரணை அதிகாரியின் முன்னிலையில் தெரிவித்தார்.

அப்போ இறந்து புதைக்கப்பட்ட நபர் யார் என்ற கோணத்தில் விசாரணை இடம்பெற்று வருகிறது.

Related Posts

கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களுக்கு இடையே மோதல்
இலங்கை

கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களுக்கு இடையே மோதல்

April 10, 2026
தனியார் பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையே மோதல் – ஒருவர் உயிரிழப்பு
இலங்கை

தனியார் பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையே மோதல் – ஒருவர் உயிரிழப்பு

April 10, 2026
பாடசாலைகளுக்கான முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் இன்றுடன் நிறைவு
இலங்கை

பாடசாலைகளுக்கான முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் இன்றுடன் நிறைவு

April 10, 2026
Load More

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest

கற்றறிந்த நிபுணர்களை உருவாக்கும் நோக்கில்,நோதன் கம்பஸ் திறந்து வைப்பு.

October 28, 2022

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைத்தது சதொச நிறுவனம்!

0
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

0
‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

0
கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

0
கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களுக்கு இடையே மோதல்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களுக்கு இடையே மோதல்

April 10, 2026
தனியார் பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையே மோதல் – ஒருவர் உயிரிழப்பு

தனியார் பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையே மோதல் – ஒருவர் உயிரிழப்பு

April 10, 2026
பாடசாலைகளுக்கான முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் இன்றுடன் நிறைவு

பாடசாலைகளுக்கான முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் இன்றுடன் நிறைவு

April 10, 2026
புறக்கோட்டை பஸ் நிலைய ஒழுங்கு மீறினால் சட்டம் கடுமையாகும் – அமைச்சர் எச்சரிக்கை

புறக்கோட்டை பஸ் நிலைய ஒழுங்கு மீறினால் சட்டம் கடுமையாகும் – அமைச்சர் எச்சரிக்கை

April 10, 2026

Recent News

Follow us

  • facebook
  • twitter
  • instagram
  • youtube
  • தமிழ்தமிழ்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

No Result
View All Result
  • இலங்கை
  • இந்தியா
  • பிரித்தானியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • அறிவித்தல்
  • வேலைவாய்ப்பு

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version