மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்ட சிறைக் கைதியொருவர்,
திடீரென மரணமடைந்துள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கொக்கட்டிச்சோலை முனைக்காடு பிரதேசத்தை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான,
சோமசுந்தரம் துரைராசா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் சட்ட விரோதமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் அவருக்கு நேற்று முன்தினம் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகவும்,
இதனையடுத்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில்,
அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




Discussion about this post