பிரதான ரயில் பாதையில் ஒரு மணித்தியாலத்திற்கு மேல் ரயில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், கொழும்பு நோக்கி செல்லும் ரயில் ஒரு மணித்தியாலத்திற்கு மேலாக கம்பஹா ரயில் நிலையத்திற்கு வரவில்லை எனவும் பயணிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த தாமதம் தொடர்பில் மருதானை ரயில் செயற்பாட்டு நிலையத்திடம் வினவியபோது, அவ்வாறான காலதாமதம் ஏற்படுவது தொடர்பில் தமக்கு தெரியாது எனவும் அது தொடர்பில் அவதானிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




Discussion about this post