வெளிநாடுகளில் இருந்து தபால் மூலம் இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தப்படுவது அதிகரித்து வருவதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், வான் மற்றும் கடல் மார்க்கமான போதைப்பொருள் கடத்தல் அதிகாரிகளால் பெருமளவு கட்டுப்படுத்த முடிந்துள்ளதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் தலைவர் ஷக்ய நாணயக்கார தெரிவித்தார்.
இலங்கைக்கு போதைப்பொருட்களை சுங்கம் மற்றும் தபால் மூலமாக அனுப்பும் நடவடிக்கைகள் தற்போது அதிகரித்து வருவதாக தெரிவித்த அவர், தபால் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகளால் குறித்த நடவடிக்கையை கட்டுப்படுத்தம் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.




Discussion about this post