காஸா பகுதியில் உடனடியாக போர் நிறுத்தம் செய்யவும், பணயக்கைதிகள் அனைவரையும் ஹமாஸ் படையினர் உடனடியாக விடுவிக்க வலியுறுத்தியும் ஐ.நா., பாதுகாப்பு சபையில் தாக்கல் செய்யப்பட்ட தீர்மானத்தை அமெரிக்கா நிராகரித்தது. இதையடுத்து அத்தீர்மானம் தோல்வியடைந்தது.
இந்நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ கூறியிருப்பதாவது:-
ஐ.நா. பாதுகாப்புச் சபை கூட்டத்தில் அமெரிக்கா எடுத்த நிலைப்பாட்டை வரவேற்கிறேன். போர் நிறுத்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, ஹமாஸ் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தவுள்ளோம். ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் வரை போரை தொடர்வோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.




Discussion about this post