பெண்கள் மற்றும் சிறுவர்கள் எதிர்கொள்ளும் துன்புறுத்தல்கள் மற்றும் ஒடுக்குமுறைகள் தொடர்பில் அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார்.
ஜனவரி 1 முதல் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் குறித்த அவசர தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.
பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் நிர்வகிக்கும் வகையில் இந்த அவசர தொலைபேசி இலக்கம் இயங்குவதுடன், இவ்விலக்கத்தின் ஊடாக நாட்டின் எந்த இடத்திலிருந்தும் எந்தவொரு மொழியிலும் பிரச்சினைகளை தெரிவிக்க முடியும் என்று அமைச்சர் கூறினார்.
இந்த அழைப்பு மையத்தின் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு மிகவும் நம்பகமான மற்றும் தனியுரிமை பாதுகாக்கப்பட்ட வகையில் சேவை வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.




Discussion about this post