ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம் நத்தார் பண்டிகைக்காக 1004 கைதிகளுக்கு விசேட பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சிறைச்சாலை ஆணையாளர் (புனர்வாழ்வு) காமினி பி. திஸாநாயக்க தெரிவித்தார்.
அதன்படி 989 ஆண் கைதிகளும், 15 பெண் கைதிகளும் விடுதலை செய்யப்படுவார்கள் என்று அவர் கூறினார்.
அந்த கைதிகளுக்கு நிபந்தனைகள் மற்றும் வரம்புகளுக்கு உட்பட்டு பொதுமன்னிப்பு வழங்கப்படும் என்று கூறிய அவர் மேலும், நாளை (25) நாடளாவிய ரீதியில் உள்ள ஒவ்வொரு சிறைச்சாலையிலிருந்தும் பொதுமன்னிப்புக் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்றும் குறிப்பிட்டார்.




Discussion about this post