சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தின் பல பிரதேசங்களில் நேற்று (27) நள்ளிரவு முதல் பெய்த தொடர்ச்சியான மழையின் காரணமாக கந்தப்பளை பிரதேசத்தில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.
நுவரெலியா-கந்தப்பளை பிரதேசத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையால் கந்தப்பளை பார்க் தோட்டம், கந்தப்பளை கிராமம், ஆறாம் கட்டை புதுரோடு மற்றும் கல்பாலம் ஆகிய பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
கந்தப்பளை பிரதேசத்தில் பார்க் தோட்டம் மற்றும் புதுரோடு பகுதியில் உள்ள காட்றாறுகள் பெருக்கெடுத்துள்ள நிலையில் விவசாய காணிகள், வீடுகள், மற்றும் பிரதான வீதிகளில் நீர் நிரம்பி வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றது.
மேலும் நுவரெலியா-உடப்புஸ்ஸலாவை பிரதான வீதியில் கந்தப்பளை புதுரோடு பகுதியில் வெள்ள நீர் நிரம்பி போக்குவரத்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் வாகன போக்குவரத்துக்கும் இன்று (28) தடை ஏற்பட்டுள்ளது.




Discussion about this post