பொலன்னறுவை மட்டக்களப்பு வீதியின் கல்லலையில் இருந்து மன்னம்பிட்டிப் பாலம் வரையிலான, 04 இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
நீர்மட்டம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் இரவு முதல் திறக்கப்பட்டதன் காரணமாக,
வினாடிக்கு சுமார் 3000 கன அடி நீர் மகாவலி ஆற்றுக்கு திறந்து விடப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
மட்டக்களப்பு நோக்கி பயணிக்கும் வாகனங்கள் மாற்றுப் பாதையாக கிரிதலே, எலஹெர, பகமூனை, தெஹி அத்த கண்டிய வீதி ஊடாக பயணிக்க முடியும் என பொலனறுவை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன் பராக்கிரம சமுத்திரத்தின் வான் கதவுகள் திறக்கப்படவுள்ளதால், மட்டக்களப்பு – பொலன்னறுவை பிரதான வீதி மறு அறிவித்தல் வரை முற்றாக மூடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது
வெலிகந்த, திம்புலாகலை மற்றும் மட்டக்களப்புக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக கதுருவெல புகையிரத நிலையத்தில் இருந்து மனம்பிட்டி வரை,
விசேட புகையிரத சேவை இடம்பெறவுள்ளதாக கதுருவெல புகையிரத நிலைய அதிபர் தெரிவித்துள்ளார்.
