காஸாவில் பாடசாலை ஒன்றை நிர்மாணிக்க உள்ளோம் ; ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளிப்பு

அரபு நாடுகளுடன் நெருக்கமான உறவுகளைப் பேணுவதே இலங்கையின் தற்போதைய வெளியுறவுக் கொள்கையாகும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

மேலும் நீண்ட காலமாக அரசியல், பொருளாதாரம் கலாச்சாரம் உட்பட எல்லா வழிகளிலும் நாங்கள் அரபு உலகத்துடன் தொடர்புகளை பேணி வெளிவந்துள்ளோம்.

இலங்கை பலஸத்தினுக்கு ஆதரவாகவே உள்ளது.
பாலஸ்தீனம் மற்றும் தற்போதைய காசா யுத்தம் தொடர்பில் இலங்கையின் நிலைப்பாடு மிகவும் தெளிவாக உள்ளது.

யாருக்கும் இன அழைப்பில் ஈடுபட முடியாது.

ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதை கூறிக்கொண்டு ,
ஒரு இனப் படுகொலையை செய்ய யாருக்கும் உரிமை இல்லை.

எங்களுக்கு உடனடியாக காசாவில் யுத்த நிறுத்தம் தேவை.

யுத்த நிறுத்தம் அறிவிக்கப்பட்ட உடனே இலங்கை, எங்களிடம் உள்ள வளங்களை கொண்டு காஸாவில் உதவியுடன் செய்ய தயாராகும்.

காசாவில் பாடசாலை ஒன்றை நிர்மாணிக்க நாங்கள் திட்டமிட்டு உள்ளோம்.

வெகு விரைவில் இந்த உலகம் பலஸ்தினை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
அந்த நாட்டில் நிரந்தர அரசாங்கம் ஒன்றை ஸ்தாபிக்க வேண்டும்.

மத்திய கிழக்கு நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 10 தூதுவர்களுடன் நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

Exit mobile version