களுகங்கையில் மூழ்கி 3 மாணவர்கள் உயிரிழப்பு

களுகங்கையில் நீராடச் சென்ற 16 வயதுடைய இரு மாணவிகளும் 15 வயதுடைய மாணவன் ஒருவனும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

களுத்துறை, பன்வில மற்றும் தொடங்கொட பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நீராடச் சென்ற மூவரும் நீரில் மூழ்கி உயிரிழந்ததாகவும், பின்னர் மீட்கப்பட்டு களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்கள் உயிரிழந்துள்ளதாகவும் வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Exit mobile version