உள்ளூர் ஆயுதங்கள் தயாரிக்கும் நிலையம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டதுடன் மூன்று பேர் விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசேட அதிரடிப்படையின் திருக்கோவில் முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம் பகுதியில் அதிகாரிகள் திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
அங்கு சட்டவிரோத துப்பாக்கிகளை உற்பத்தி செய்த ஒருவர், துப்பாக்கி வைத்திருந்தவர் மற்றும் ஆயுத உற்பத்திக்கு துணையாக இருந்த ஒருவர், இந்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் 01 துப்பாக்கி, துப்பாக்கி உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் 03 இரும்பு குழாய்கள், வெட்டுவதற்கு பயன்படுத்தப்படும் இரும்பு 01 பவர் ஷோ இயந்திரம் மற்றும் வெல்டிங் இரும்புக்கு பயன்படுத்தப்படும் வெல்டிங் ஆலை இயந்திரம் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.
இதன்போது திருக்கோவில் மற்றும் கஞ்சிக்குடியாறு ஆகிய பகுதிகளைச் 34, 42, 54 வயதுடைய 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.











Discussion about this post