பெலியத்த துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், ஹக்மன பொலிஸார் மோட்டார் சைக்கிள் மற்றும் வான் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.
தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு T-56 துப்பாக்கிகளை அப்புறப்படுத்த மோட்டார் சைக்கிள் பயன்படுத்தப்பட்டதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சந்தேகநபர்கள் குற்றச் செயலுக்குப் பின்னர் தப்பிச் செல்ல இந்த வேனை பயன்படுத்தி இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.











Discussion about this post