பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் அடுத்த வாரம் முதல் இரண்டு நாட்களில் கைச்சாத்திடப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இந்த சட்டமூலம் கடந்த 23ம் திகதி பாராளுமன்றத்தில் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
ஆனால், சபாநாயகர் இந்த சட்டமூலத்தில் இதுவரை கையெழுத்திடாததால், அது அமுல்படுத்தப்படவில்லை.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, “திங்கட்கிழமையோ செவ்வாய் கிழமையோ வரும். வந்ததும் கையெழுத்திடுவேன். தாமதமாகாது.” என்றார்.











Discussion about this post