இந்திய மீனவர்களிடம் மனிதாபிமான அணுகுமுறையை கடைபிடிக்க வேண்டும் என இந்திய கடற்படை இலங்கை கடற்படையிடம் வலியுறுத்தியுள்ளது. நவம்பர் 4 ஆம் திகதி வங்காள விரிகுடாவில் இலங்கைக் கப்பலில் நடைபெற்ற இந்திய கடல் எல்லைக் கோடு (IMBL) கூட்டத்தில் இது பற்றி விவாதிக்கப்பட்டது.
இதன்போது கடல் பாதுகாப்பு மற்றும் பாக் ஜலசந்தியில் இந்திய மீனவர்களின் பாதுகாப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.
“இந்திய மீனவர்கள் மீது மனிதாபிமான அணுகுமுறையைக் காட்டுமாறு இலங்கை பாதுகாப்பு நிறுவனங்களை இந்திய பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர். அத்தோடு இரு தூதுக்குழுக்களும் விரைவான தகவல் பகிர்வின் அவசியத்தை மீண்டும் வலியுறுத்தின
Discussion about this post