நாட்டில் முட்டை தட்டுப்பாடு ஏற்படும் -அஜித் குணசேகர

Eggs-Newsinfirst

Eggs-Newsinfirst

அடுத்த வருடம் நாட்டில் முட்டை தட்டுப்பாடு ஏற்படும் என அகில இலங்கை கோழிப்பண்ணை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.

கால்நடை தீவன இறக்குமதி குறைவடைந்தமை மற்றும் கடந்த பருவத்தில் நிலவிய பொருளாதார சிரமங்களினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போதைய சூழ்நிலையில் முட்டையின் விலை மீண்டும் உயர்ந்து வருகிறது.

ஒரு முட்டை 50 ரூபாய்க்கு விற்க வேண்டிய நிலையில், தற்போது ​​ஒரு சில கடைகளில் 53 ரூபாய்க்கு முட்டை விற்கப்படுகிறது.

இந்த நிலைமையை எதிர்கொண்டு நுகர்வோர் முட்டைகளை கொள்வனவு செய்வதை தவிர்த்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Exit mobile version