அரச அதிகாரிகளுக்கு எச்சரிக்கை..! அறிமுகப்படுத்தப்பட்ட புதிய திட்டம்

இலங்கை அரச அதிகாரிகள் மீதான இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுக்களை தெரிவிக்க புதிய தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அந்தவகையில், 1905 என்ற இலக்கம் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன், இந்த இலக்கத்திற்கு அழைப்பதன் மூலம் அரச அதிகாரிகள் மீதான இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுக்களை முன்வைக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version