கொழும்பு தாமரைக் கோபுர முகாமைத்துவம் தனது வளாகத்தில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வில் இரு இளைஞர்கள் உயிரிழந்தமை தொடர்பில் தெளிவுபடுத்தியுள்ளது.
முல்லேரியாவைச் சேர்ந்த 27 வயதுடைய பெண்ணும், தெஹிவளையைச் சேர்ந்த 22 வயதுடைய ஆணும் 2024ஆம் ஆண்டு மார்ச் 07ஆம் திகதி கொழும்பு தாமரைக் கோபுரத்தில் நடைபெற்ற DJ விருந்தில் சுகவீனமடைந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்ட தகவல்கள், போதைப்பொருள் கலந்த பானங்களை உட்கொண்டதால் இருவரும் உடல் நலக்குறைவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
துரதிஷ்டவசமான மரணங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தும் கொழும்பு தாமரைக் கோபுர முகாமைத்துவம், இந்நிகழ்வு அதன் வளாகத்தில் உள்ள வெளிப்புற இடத்தில் வாடகைக்கு விடப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.
இந்த நிகழ்வு தனிப்பட்ட முறையில் ஏற்பாடு செய்யப்பட்டு வாடகை இடத்தில் நடத்தப்பட்டதாகத் தெரிவித்த தாமரை கோபுர அதிகாரிகள், இது கொழும்பு தாமரை கோபுரம் மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்களின் செயல்பாடுகளிலிருந்து வேறுபட்டது என்று கூறினார்.
NW




Discussion about this post