காற்றில் வெப்பம் மற்றும் ஈரப்பதம் ஆகிய இரண்டும் தொடர்ச்சியாக இருப்பதால் அதனால் ஒற்றைத் தலைவலி தூண்டப்படுகிறது. வெப்பநிலை அதிகமாகும் பொழுது.
வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஒற்றைத் தலைவலியால் அவதிப்படக்கூடிய நபர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனில் சூடான காலநிலை ஒற்றைத் தலைவலியை மோசமாக்கலாம். ஆகவே அதிலிருந்து நிவாரணம் பெறக்கூடிய ஒரு சில யுக்திகளை நீங்கள் முன்கூட்டியே பயன்படுத்த வேண்டும்.
கோடை காலத்தில் ஒற்றை தலைவலி பிரச்சினை மோசமாகலாம் என்று சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இதற்கு பல்வேறு விதமான தூண்டுதல்கள் காரணமாக அமையலாம். காற்றில் வெப்பம் மற்றும் ஈரப்பதம் ஆகிய இரண்டும் தொடர்ச்சியாக இருப்பதால் அதனால் ஒற்றைத் தலைவலி தூண்டப்படுகிறது. வெப்பநிலை அதிகமாகும் பொழுது.
விளம்பரம்
News18
ஒற்றைத் தலைவலி ஏற்படுவதற்கான அபாயம் அதிகரிப்பதற்கான முக்கியமான சில காரணங்களை தெரிந்து கொள்ளலாம்!
நீர்ச்சத்து இழப்பு: கோடைகாலத்தில் ஒற்றைத் தலைவலி அதிகரிப்பதற்கான முக்கியமான காரணமாக அமைவது நீர்ச்சத்து இழப்பு. வெப்பமான வானிலை காரணமாக நமக்கு அதிகப்படியாக வியர்க்கிறது. இதனால் நமது உடலில் இருந்து திரவ இழப்பு ஏற்படுகிறது. நீர்ச்சத்து இழப்பு ரத்த பருமனை குறைக்கிறது. அதனால் எலக்ட்ரோலைட் அளவுகளில் மாற்றம் ஏற்படுகிறது. இவை இரண்டுமே ஒற்றைத் தலைவலியை மோசமாக்கலாம்.
சூரிய வெளிச்சத்திற்கு வெளிப்படுத்துதல்: வெயிலுக்கு உங்களை வெளிப்படுத்திக் கொள்வதாலும் ஒற்றை தலைவலி ஏற்படலாம். சூரிய வெளிச்சம் உங்களுக்கு டென்ஷன், தலைவலி அல்லது ஏற்கனவே இருக்கக்கூடிய ஒற்றைத் தலைவலியை மோசமாக்கலாம்.
மோசமான காற்றின் தரம்: மாசுபடுத்திகள், ஒவ்வாமை பொருட்கள், மகரந்தம் போன்ற ஒரு சில காரணிகளால் கோடை காலத்தில் காற்றின் தரம் மோசமாகலாம். மோசமான காற்றின் தரம் நமது சுவாச அமைப்பை எரிச்சலடைய செய்து, அதில் வீக்கத்தை தூண்டுவதன் மூலமாக ஒற்றை தலைவலியை உண்டாக்குகிறது.
சீர்குலையும் வழக்கங்கள்: பொதுவாக கோடை காலங்களில் விடுமுறைகள், சீரற்ற தூக்கம் முறைகள் அல்லது மாறிப்போன உணவு பழக்க வழக்கங்கள் என நமது அன்றாட பழக்கங்களில் பல்வேறு விதமான மாற்றங்களை உட்படுத்துகிறோம். இந்த சீர்குலைவுகள் நமக்கு மன அழுத்தம், சோர்வு மற்றும் ஹார்மோன் அளவுகளில் மாற்றங்களை ஏற்படுத்தலாம். இந்த காரணங்கள் அனைத்தும் ஒற்றை தலைவலியை உண்டாக்கும்.
ஈரப்பத (Humidity) அளவுகள்: கோடைகாலத்தில் காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும். இதனால் ஒரு சில நபர்களில் ஒற்றைத் தலைவலிக்கான அறிகுறிகள் அதிகரிக்கலாம். காற்றில் ஈரப்பதம் அதிகமாகும் பொழுது நமது உடலானது வெப்பநிலையை ஒழுங்குபடுத்துவதில் சிரமத்தை அனுபவிக்கிறது. இதன் விளைவாக அசௌகரியம் மற்றும் நீர்ச்சத்து இழப்பு உண்டாகிறது.
வெயில் காலத்திலும் சளி புடிச்சு பாடாய் படுத்துதா.? இப்போ இதுதான் உங்களுக்கு தேவை..!
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் :
ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய நபர்கள் முன்னெச்சரிக்கையாக அதிக அளவு திரவங்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.
முடிந்த அளவு சூரிய வெளிச்சத்திற்கு உங்களை வெளிப்படுத்திக் கொள்ளாமல் இருப்பது, தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் வெளியே செல்லும் பொழுது தொப்பிகள், குடை போன்றவற்றை பயன்படுத்துவது அவசியம். முடிந்தளவு வீட்டில் இருப்பது நல்லது.
மன அழுத்தம் காரணமாகவும் தலைவலி மற்றும் ஒற்றை தலைவலி ஏற்படலாம். எனவே ஆழமான சுவாச பயிற்சி, தியானம் போன்றவற்றை பின்பற்றுவதன் மூலமாக மன அழுத்தத்திலிருந்து விடுபடுங்கள்.
ஒற்றைத் தலைவலியை தடுப்பதில் தரமான தூக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே தினமும் போதுமான அளவு தூக்கம் பெறுகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
Discussion about this post