பிற்பகல் 2 மணிக்குப் பிறகு 100 மி.மீ.க்கு மேல் பலத்த மழை பெய்யக்கூடும். இன்று
நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும். தேசிய வானிலை ஆய்வு மையத்தின் முன்னறிவிப்பு பிரிவு இன்று தெரிவித்துள்ளது.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாதகமாக வளிமண்டல நிலைமை காணப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கிழக்கு, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் காலை வேளையில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்.
எவ்வாறாயினும், மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படலாம்.




Discussion about this post