பிரதமர் தினேஷ் குணவர்தன தென் கொரியாவில் தடுப்பூசி மற்றும் உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சியில் உலகளாவிய நிறுவன பங்காளியான SK Biotech Research Institute இன் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டுள்ளார்.
பிரதமர் குணவர்தன இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு தென்கொரியாவிற்கு நேற்று (ஏப்ரல் 03) சென்றுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பிரதமரின் தூதுக்குழுவில் இராஜாங்க அமைச்சர்களான பியால் நிஷாந்த மற்றும் அனுப பஸ்குவல், பாராளுமன்ற உறுப்பினர்களான யதாமினி குணவர்தன, ராஜிக விக்கிரமசிங்க, முதித டி சொய்சா மற்றும் ஜகத் குமார மற்றும் பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.
Discussion about this post