கனடாவில் உள்ள மனிடோபா மாகாணத்திற்கான நாட்டின் கெளரவ தூதராக மொஹமட் இஸ்மத்தை இலங்கை நியமித்துள்ளது.
கனடாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் ஹர்ஷ குமார நவரத்ன அவர்கள் நியமன ஆணைக்குழுவை 2024 மார்ச் 25 ஆம் திகதி ஒட்டாவாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் வைத்து புதிய கெளரவ தூதரிடம் கையளித்தார்.
ஒட்டாவாவில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தின் படி, கெளரவ தூதர் இஸ்மத் தற்போது டென்னிஸ் கனடாவின் இயக்குநர் குழுவாக உள்ளார், இது கனடாவில் டென்னிஸின் வளர்ச்சியை வழிநடத்தும் நோக்கத்துடன் ஒரு இலாப நோக்கற்ற தேசிய விளையாட்டு சங்கமாகும். ஓய்வு பெற்ற கணக்காளரான இவர் கொழும்பு றோயல் கல்லூரியின் பழைய மாணவராவார்.
நியமன ஆணைக்குழுவை கையளிக்கும் நிகழ்வின் போது, கெளரவ தூதரகத்தின் பின்னணியைக் கருத்தில் கொண்டு, வழக்கமான தூதரக உதவியைத் தவிர்த்து விளையாட்டு ஒத்துழைப்பு மூலம் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய வேண்டும் என்று உயர்ஸ்தானிகர் பரிந்துரைத்தார். இலங்கை டென்னிஸ் வீரர்களுக்கான பயிற்சி வாய்ப்புகளை கனடாவில் பெற்றுக் கொள்வதன் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்ததோடு, இரு நாடுகளுக்கும் இடையில் வர்த்தகம் மற்றும் சுற்றுலாவை எளிதாக்குவதற்கு ஒவ்வொரு கனேடிய மாகாணத்திலும் வர்த்தக சபைகளை நிறுவ வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
இலங்கையை சுற்றுலாத் தலமாக மேம்படுத்துவதில் ஏற்கனவே ஈடுபட்டுள்ள முதியோர் குழு உட்பட 5000 க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் மனிடோபா மாகாணத்தில் வசித்து வருவதாக கெளரவ துணைத் தூதுவர் தெரிவித்தார். அனைத்து சங்கங்களுடனும் நெருக்கமாகப் பணியாற்றப் போவதாகவும், உயர் ஸ்தானிகராலயத்தின் முன்னோக்கிச் செல்லும் முயற்சிகளை ஒருங்கிணைக்கும் வகையில் ஏனைய மாகாணங்களில் உள்ள இலங்கை கௌரவத் தூதுவர்களுடன் வலையமைப்பை எதிர்நோக்குவதாகவும் அவர் கூறினார். ஒட்டாவாவிலுள்ள இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகர் அன்சுல் ஜான் மற்றும் உயர்ஸ்தானிகராலயத்தின் அமைச்சர் ஆலோசகர் லஷிங்க தமுல்லகே ஆகியோரும் கௌரவ தூதருடனான கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.
கெளரவ தூதரகத்தின் அலுவலகம் 234 Portsmouth Boulevard, Winnipeg, Manitoba, R3P 2E3, கனடாவில் அமைந்துள்ளது மற்றும் கெளரவ தூதரை தொலைபேசி எண் +1-(204) 227-4531 அல்லது ismaths@shaw.ca என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம்.
Discussion about this post