கர்நாடகாவில் ஆழ்துளைக் கிணற்றில் தவறிவிழுந்த 2 வயது குழந்தையை 20 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு.
கர்நாடகா மாநிலம் விஜயபுரா மாவட்டம் லச்யானா கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் முஜகொன்டா, பூஜா தம்பதியின் 2 வயது ஆண் குழந்தை சாத்விக். இவர்களுக்கு சொந்தமான, 4 ஏக்கர் நிலத்தில் கரும்பு மற்றும் எலுமிச்சை பயிரிட்டிருந்தனர். தொடர்ந்து மழை பொய்த்துப் போனதால், பயிர்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது. எனவே சாத்விக்கின் தாத்தா சங்கரப்பா, நிலத்தில் ஆழ்துளை கிணறு தோண்டியிருக்கிறார். 500 அடி தோண்டியும் தண்ணீர் கிடைக்கவில்லை என்பதால், அதை மூடாமல் அப்படியே விட்டுவிட்டார். இந்நிலையில், புதன் கிழமை மாலை குழந்தை சாத்விக் நிலத்தில் விளையாடிக் கொண்டிருக்கம் போது, தவறி ஆழ்துளை கிணற்றிற்குள் தவறி விழுந்துவிட்டது.
Discussion about this post