கேரளாவில் கோயில் திருவிழாவின் போது மிரண்ட யானை ஒன்று துணைப் பாகனை மிதித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம், வைக்கம் பகுதியில் உள்ள ராமர் கோயிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி சாமி வீதி உலா நடத்துவதற்காக குன்னிலட்சுமி என்ற யானையை வரவழைத்திருந்தனர். புதன்கிழமை இரவு யானைக்கு அலங்காரம் செய்யும் பணியில் கோயில் நிர்வாகிகளும், பாகன்களும் ஈடுபட்டிருந்தனர். அப்போது காலில் சங்கிலி கட்டப்பட்டிருந்த யானை, சாமியை தலைப்பகுதிக்கு ஏற்றுவதற்கு வசதியாக ஒரு காலை மடக்கி அமர்ந்தது. கோவில் நிர்வாகத்தினரும் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சாமி சிலையை யானையின் தலைப்பகுதியில் தூக்கி வைத்தனர்.
Discussion about this post