நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (24) கோட்டை பொலிஸில் சரணடைந்த பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு அழுத்தம் கொடுத்தமை தொடர்பான வழக்கு, நேற்று (23) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, அர்ச்சுனா எம்.பி. மன்றில் முன்னிலையாகத் தவறியமையால், நீதிமன்றம் அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பித்திருந்தது.
பிடியாணை உத்தரவுக்கு அமைய, அவர் இன்று பொலிஸில் சரணடைந்ததை அடுத்து கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதன்போது அவரை பிணையில் விடுவிக்க கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.











Discussion about this post