ரஜரட்ட பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இன்று (30) அனைத்துப் பணிகளிலிருந்தும் விலகி, வேலை நிறுத்தத்தை ஆரம்பித்துள்ளனர்.
ரஜரட்ட பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் நாலக கீக்கியனகே, பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பல்கலைக்கழக சட்டத் திருத்த வரைவை முறையாக நிறைவேற்றுவதற்கு முன்பு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அதனை அங்கீகரித்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இவ் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
சட்டம் இயற்றப்பட்ட பின்னர் செயல்படுத்தப்பட்டாலும் அதனை முன்கூட்டியே செயல்படுத்துவது பல்கலைக்கழக சுயாட்சியை பாதிக்கும் என்றும் பேராசிரியர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும் இப் பணி நிறுத்தத்தை ஆதரிப்பதாக பேராசிரியிர் கீக்கியனகே தெரிவித்துள்ளார்.











Discussion about this post