மட்டக்களப்பு சந்திவெளி பொலிஸ் பிரிவிலுள்ள வெட்டாறு சோலை பகுதி புகையிரத தண்டவாளத்திற்கு அருகில் கைவிடப்பட்டிருந்த 61 மில்லி மீற்றர் ரக மோட்டார் குண்டு ஒன்றை இன்று (18) மீட்டுள்ளதாக சந்திவெளி பொலிசார் தெரிவித்தனர்.
பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கு அமைய குறித்த பகுதியில் கைவிடப்பட்டிருந்து மோட்டார் குண்டை விசேட அதிரடிப்படையின் குண்டு செயலிழக்கும் பிரிவினர் உதவியுடன் மீட்டுள்ளனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட குண்டை வெடிக்க வைப்பதற்கு நீதிமன்ற உத்தரவை பெறுவதற்கான நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சந்திவெளி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.











Discussion about this post