Saturday, March 7, 2026
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
No Result
View All Result
  • தமிழ்
  • සිංහල
  • English
Home இலங்கை

by editor
March 6, 2026
in இலங்கை
0 0
A A
0
Share on FacebookShare on Twitter

க.பொ.த. உயர்தர தொழிற் பாடத்துறைக்கு மாணவர்களை அனுமதித்தல் (2026/2027 கல்வி ஆண்டு)

உயர்தர தொழிற் பாடத்துறையில் 2026/2027 கல்வி ஆண்டிற்காக தரம் 12 இற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. இப்பாடத்துறைக்கு மாணவர்களை அனுமதிக்கும்போது க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் கருத்திற்கொள்ளப்பட மாட்டாது என்பதுடன், உயர்தர வகுப்பில் இணைந்து தரம் 13 வரை பாடசாலைக் கல்வியைத் தொடர்வதன் மூலம் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அங்கீகரிக்கப்பட்ட தொழிற் தகைமைகளை (NVQ 4) பெற்றுக்கொள்வதற்கு மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது.

2025 (2026) ஆம் ஆண்டில் அல்லது கடந்த 3 ஆண்டுகளுக்குள் சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய எந்தவொரு மாணவரும் தொழிற் பாடத்துறை உள்ள பாடசாலையொன்றில் தரம் 12 இற்கு விண்ணப்பிக்க முடியும்.

அதற்கமைய, தரம் 12 இன் அனுமதிக்கப்படும் மாணவர்களது மென்திறன்களை விருத்தி செய்வதையும் மற்றும் தொழிற் துறைகளை அறிமுகப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட மொடியுல்களைக் கற்க முடியும். தரம் 13 இல் அந்த மாணவர்கள் தமக்கு பொருத்தமான ஒரு தொழிலில் NVQ மட்டம் 4 இற்குரிய பயிற்சியைப் பெறுவதற்காக அரசாங்க தொழிற் பயிற்சி நிறுவனமொன்றுடன் பாடசாலையினாலேயே இணைக்கப்படுவர். இதன்போது, மாணவர்கள் தொழிற் பயிற்சி நிறுவனத்திலும் அதேபோன்று தொழில் நிலையங்களிலும் பயிற்சியைப் பெற்றுக்கொள்ள முடியும்.

அதன்படி, சுற்றுலா மற்றும் விருந்தோம்பல், மோட்டார் வாகனத் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம், சுகாதாரம் மற்றும் பராமரிப்பு சேவைகள், மானிக்கம் மற்றும் தங்க ஆபரணத் தொழில்நுட்பம், அழகுக்கலை, அரங்கேற்றக் கலைகள் உள்ளிட்ட கைவினைத்திறன்கள், உணவு உற்பத்தி, ஆடை வடிவமைப்பு, மின்சாரம் மற்றும் இலத்திரனியல் தொழில்நுட்பம், உலோகத் தயாரிப்பு, வெல்டிங் தொழில்நுட்பம், இயந்திரங்களை இயக்குதல், கட்டிட நிர்மாணத் துறை, உள்ளக வடிவமைப்பு, தோட்ட வடிவமைப்பு, விவசாயம் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில், நீரியல் வளத் தொழில்நுட்பம், விளையாட்டு, உயிர்காப்பு மற்றும் நீச்சல் கலை, வர்த்தகம் மற்றும் வழங்கல் போன்ற பல்வேறு துறைகளில் தொழிற் பயிற்சி வாய்ப்புகள் மாணவர்களுக்குக் கிடைக்கும்.

இப்பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்து பாடசாலைக் கல்வியைப் பூர்த்தி செய்யும் மாணவர்கள் NVQ 4 சான்றிதழைப் பெற்றுக்கொள்ள முடியும். அதன் மூலம் உள்நாட்டு அல்லது வெளிநாட்டு வேலைவாய்ப்புகள், உயர்கல்வி வாய்ப்புகள் மற்றும் முயற்சியாண்மைசார் துறைகளுக்கும் பிரவேசிக்க முடியும்

உயர்தர தொழிற் பாடத்துறையில் இணைவதற்கான விண்ணப்பப் படிவம், விண்ணப்பிக்கக்கூடிய பாடசாலைகளின் பட்டியல், தொழிற் பயிற்சி பெறக்கூடிய துறைகள் உள்ளிட்ட விபரங்கள் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் இணையதளத்தில் விசேட அறிவித்தல்களின் கீழ் பிரசுரிக்கப்பட்டுள்ளன.

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளைக் கருத்திற்கொள்ளாது மாணவர்களுக்குப் பதின்மூன்று வருட கல்வியை உறுதிப்படுத்தும் நோக்கில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சினால் இப்பாடத்துறை நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இது தொடர்பான மேலதிக விபரங்களை அமைச்சின் ‘அனைவருக்கும் கல்வி’ கிளையுடன் தொடர்பு கொள்வதன் மூலமோ அல்லது அமைச்சின் இணையதளத்தின் ஊடாகவோ பெற்றுக்கொள்ள முடியும்.

கல்விப் பணிப்பாளர் (அனைவருக்கும் கல்வி)

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு

இசுருபாய, பத்தரமுல்ல

0112 787136, 0112 786746, directorefa@moe.gov.lk

Related Posts

ஈரான் ஆதரவாளர்கள் கொழும்பில் ஆர்ப்பாட்டம்
இலங்கை

ஈரான் ஆதரவாளர்கள் கொழும்பில் ஆர்ப்பாட்டம்

March 6, 2026
எதிர்க்கட்சிகள் சுமத்தும் குற்றச்சாட்டுகளை பிரதமர் நிராகரிப்பு
இலங்கை

எதிர்க்கட்சிகள் சுமத்தும் குற்றச்சாட்டுகளை பிரதமர் நிராகரிப்பு

March 6, 2026
‘’ஈரான் கப்பலுக்கு அனுமதி: அநுர அரசின் முடிவு சரி’’ நாமல் ராஜபக்ச
இலங்கை

‘’ஈரான் கப்பலுக்கு அனுமதி: அநுர அரசின் முடிவு சரி’’ நாமல் ராஜபக்ச

March 6, 2026
Load More

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest

கற்றறிந்த நிபுணர்களை உருவாக்கும் நோக்கில்,நோதன் கம்பஸ் திறந்து வைப்பு.

October 28, 2022

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைத்தது சதொச நிறுவனம்!

0
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

0
‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

0
கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

0
ஈரான் ஆதரவாளர்கள் கொழும்பில் ஆர்ப்பாட்டம்

ஈரான் ஆதரவாளர்கள் கொழும்பில் ஆர்ப்பாட்டம்

March 6, 2026

March 6, 2026
எதிர்க்கட்சிகள் சுமத்தும் குற்றச்சாட்டுகளை பிரதமர் நிராகரிப்பு

எதிர்க்கட்சிகள் சுமத்தும் குற்றச்சாட்டுகளை பிரதமர் நிராகரிப்பு

March 6, 2026
‘’ஈரான் கப்பலுக்கு அனுமதி: அநுர அரசின் முடிவு சரி’’ நாமல் ராஜபக்ச

‘’ஈரான் கப்பலுக்கு அனுமதி: அநுர அரசின் முடிவு சரி’’ நாமல் ராஜபக்ச

March 6, 2026

Recent News

Follow us

  • facebook
  • twitter
  • instagram
  • youtube
  • தமிழ்தமிழ்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

No Result
View All Result
  • இலங்கை
  • இந்தியா
  • பிரித்தானியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • அறிவித்தல்
  • வேலைவாய்ப்பு

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version