பிள்ளையானின் அடிப்படை உரிமைகள் மனு – விசாரணை 18ஆம் திகதி
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்), பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டார். இவரது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதாகக் குற்றம்சாட்டி, மனு ஒன்று உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு இன்று (மார்ச் 9) உயர் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. மூவர் கொண்ட நீதியரசர்கள் குழு, முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை கருத்தில் கொண்டு, விசாரணை நடத்த மார்ச் 18 ஆம் திகதி அழைக்க உத்தரவிட்டது.
மனுவின் பிரதிவாதிகளாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர், பொலிஸ் மா.அதிபர், சட்டமா.அதிபர் உள்ளிட்ட அதிகாரிகள் பெயரிடப்பட்டுள்ளனர்.
மனுதாரர் மனுவில், எந்தவொரு நியாயமான காரணமுமின்றி தடுத்து வைக்கப்பட்டிருப்பது சட்டத்திற்குப் புறம்பானது மற்றும் அவரது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன என கோரிக்கை விடுத்துள்ளார்.




Discussion about this post