‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் காடுகளின் பரப்பை அதிகரிக்கும் பொருட்டு ‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (சனிக்கிழமை) ஆரம்பித்து வைத்தார்.

செங்கல்பட்டு மாவட்டம், வண்டலுார் உயிரியல் பூங்கா அருகே உள்ள வனத் துறைக்குச் சொந்தமான இடத்தில் மகிழம் மரக்கன்றை நட்டு இந்த இயக்கத்தை அவர் தொடங்கிவைத்தார்.

மேலும் பாரம்பரிய விதைகள், காடுகள், மரங்கள் குறித்த குறிப்புகள் அடங்கிய கண்காட்சியினை முதல்வர் பார்வையிட்டார்.

இந்த விழாவில் அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.

இதன்படி தமிழகத்தில் வனப்பரப்பை 28.3 சதவிகிதத்தில் இருந்து 33 சதவிகிதமாக உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

Exit mobile version