கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

கேரளாவில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நடத்திய முழு அடைப்புப் போராட்டத்தைத் தொடர்ந்து, 900 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பேருந்துகள் மீது கல்வீச்சு, ஆர்.எஸ்.எஸ் பா.ஜ.க. அலுவலகங்கள் மீது தாக்குதல் என்று வன்முறையில் ஈடுபட்டவர்களை தடியடி நடத்தி பொலிஸார் விரட்டியடித்தனர்.

பெட்ரோல் குண்டுகளை பைக்கில் வீச முயற்சித்த சிலரை கைது செய்துள்ளதாக சட்டம் ஒழுங்கு கூடுதல் ஏடிஜிபி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கோழிக்கோடு, கொச்சி, கொல்லம், ஆழப்புழா, கண்ணூர் ஆகிய இடங்களில் நடைபெற்ற கல்வீச்சு சம்பவங்களில் பேருந்துகள் சேதமடைந்துள்ளதுடன், திருவனந்தபுரத்தில் ஆட்டோக்கள் கார்கள் மீதும் கற்கள் வீசப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதையடுத்து கேரள உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வன்முறை குறித்து வழக்கு பதிவு செய்துள்ளது.

Exit mobile version