உக்ரைனிடம் இருந்து ஆக்கிரமிக்கப்பட்ட நான்கு பகுதிகளில், வீடு வீடாகச் சென்று வாக்குகளை சேகரிக்கும் பணிகளில் ரஷ்ய ஆதரவு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
அண்மைய தகவலின் படி, ‘வாக்காளர்கள் வாய்மொழியாக பதிலளிக்க வேண்டும் அந்த பதிலை சிப்பாய் தாளில் குறிக்கிறார்’ என தெரிவிக்கப்படுகின்றது.
தெற்கு கெர்சனில், ரஷ்ய காவலர்கள் மக்களின் வாக்குகளை சேகரிக்க நகரின் நடுவில் வாக்குப் பெட்டியுடன் நின்று கொண்டிருந்தனர். வீட்டுக்கு வீடு வாக்களிப்பது ‘பாதுகாப்பு’ என்று ரஷ்ய அரசு ஊடகம் கூறுகிறது.
செப்டம்பர் 27ஆம் திகதி பிரத்தியேகமாக தனிநபர் வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் மற்ற நாட்களில், வாக்களிப்பு சமூகங்களிலும், வீடு வீடாகவும் ஏற்பாடு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post