மோட்டார் போக்குவரத்து திணைக்களம் மற்றும் பொலிஸார் இணைந்து இன்று (10) விஷேட சோதனையை மேற்கொண்டனர்.
அது அதிக புகை வெளியேற்றும் வாகனங்களைக் கண்டறிவதற்கான நடவடிக்கையாகும்.
கண்டி – கொழும்பு பிரதான வீதியின் கடவத்த நகரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, அதிக புகையை வெளியேற்றும் சுமார் 20 வாகனங்கள் அடையாளம் காணப்பட்டதாக தெரிய வருகிறது.
இந்தச் சோதனைகள் எதிர்காலத்தில் நாடளாவிய ரீதியில் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.











Discussion about this post