பால் தேநீர் மற்றும் தேநீரின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி பால் தேநீரின் விலையை 20 ரூபாயால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பால் தேநீரின் புதிய விலை 100 ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, தேநீரின் விலையை 20 ரூபாயால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தேநீரை 30 ரூபாயாக விற்பதற்கும் அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
இந்த விலைக்குறைப்பானது இன்று முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post