அரச நிவாரணத் திட்டத்திற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள 34 இலட்சம் விண்ணப்பங்கள் தொடர்பில் உன்னிப்பாக ஆராய்ந்து வருவதாக நிதி இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த விண்ணப்பதாரர்களில் தகுதியானர்கள் மாத்திரம் தெரிவு செய்யப்பட்டு, அவர்களுக்கான நிவாரணத் திட்டம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படும் என இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
தற்போது வழங்கப்பட்டு வரும் அரச நிவாரணங்கள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரை தொடர்ந்தும் வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.











Discussion about this post