இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத்தில் இருந்து குப்த்காசி நோக்கி பயணித்த தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் 7பேர் உயிரிழந்துள்ளார்.
கேதார்நாத்தின் காட் ஷடி என்ற மலைப்பாங்கான பகுதியில் பறந்துகொண்டிருந்தபோது ஹெலிகொப்டர் திடீரென தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இவ் விபத்து சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் ஹெலிகொப்டர் முழுவதும் தீப்பற்றி எரிந்துள்ளது.
இந்நிலையில் குறித்த, ஹெலிகாப்டரில் பயணித்த 7 பேரும் தீயில் கருகி உயிரிழந்துள்ளனர். மோசமான வானிலை காரணமாக ஹெலிகொப்டர் விபத்தில் சிக்கி இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
Discussion about this post