க.பொ.த. சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் அடுத்த மாதம் 25ஆம் திகதிக்குப் பின்னர் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
விடைத்தாள்களை திருத்தும் பணிகள் தற்போது இறுதிக் கட்டத்தில் உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார்.
கடந்த மே மாதம் நாடளாவிய ரீதியில் 3 ஆயிரத்து 844 பரீட்சை நிலையங்களில் க.பொ.த. சாதாரண தர பரீட்சை நடைபெற்றது.
இம்முறை பரீட்சைக்கு 5 இலட்சத்து 17 ஆயிரத்து 486 மாணவர்கள் தோற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.











Discussion about this post