நுகர்வோருக்கு 55 ரூபாவுக்கு முட்டை விற்பனை செய்வதை சங்கம் நிறுத்தவில்லை என அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.
“சமூக வலைதளங்களில் எத்தனை விமர்சனங்கள் வந்தாலும், நுகர்வோருக்கு நிவாரணம் அளிக்கும் நோக்கத்தில் இந்த திட்டத்தை செயற்படுத்துவோம்,” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் உள்ள ஒவ்வொரு நகரங்களுக்கும் தங்கள் சங்கம் சென்று முட்டைகள் தலா ரூ.55க்கு கிடைக்கச் செய்யும் என்றார்.
நுவரெலியாவில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
எங்கள் சங்கம் ஒருபோதும் வியாபாரத்தில் ஈடுபடவில்லை. முட்டையை விற்பனை செய்து விலையை நிர்ணயம் செய்யவில்லை. இருப்பினும், முட்டை விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள நுகர்வோருக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், குழுக்களாக பிரிந்து பல்வேறு நகரங்களுக்கு லொரிகளில் சென்று முட்டைகளை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளோம்,” எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.





Discussion about this post