சீனாவில் திருமண வயதுடைய பெண்களின் எண்ணிக்கையை விட ஆண்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், பலர் வெளிநாட்டு பெண்களைத் திருமணம் செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
2020 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி, திருமண வயதுடைய பெண்களை விட சுமார் 2 கோடி ஆண்கள் அதிகமாக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக, சில சீன ஆண்கள் வங்காளதேசம், பாகிஸ்தான், கம்போடியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பெண்களைத் திருமணம் செய்ய இடைத்தரகர்களின் உதவியை நாடுகின்றனர்.
எனினும், இதுபோன்ற திருமண ஏற்பாடுகளில் மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. போலி இடைத்தரகர்கள் பணத்தைப் பெற்றுக்கொண்டு ஏமாற்றுவதும், திருமணம் என்ற பெயரில் பண மோசடிகள் நடைபெறுவதும் பதிவாகியுள்ளன.
இந்த நிலையில், சீனத் தூதரகம் அவசர எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. வெளிநாடுகளில் நடைபெறும் திருமண மோசடிகள் மற்றும் மனிதக் கடத்தல் தொடர்பான அபாயங்கள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
மேலும், சமூக ஊடகங்கள் அல்லது இடைத்தரகர்கள் மூலம் அறிமுகமான நபர்களை நம்பி சட்டவிரோத திருமணங்களில் ஈடுபட வேண்டாம் என்றும், வெளிநாட்டு பெண்களை மணப்பது தொடர்பான உள்ளூர் சட்டங்களை முறையாகக் கவனிக்க வேண்டும் என்றும் சீன அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.




Discussion about this post