நாடு முழுவதும் செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரம் இல்லாத நிறுவனங்கள் விமான டிக்கெட்டுகளை வழங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது என்று இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகார சபை (CAASL) இன்று(04) தெரிவித்துள்ளது.
CAASL பணிப்பாளர் நாயகத்தால் வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ அனுமதிப்பத்திரம் இன்றி விமான டிக்கெட்டுகளை வழங்குவது தண்டனைக்குரிய குற்றமாகும் என்று CAASL சுட்டிக்காட்டியுள்ளது.
இது போன்ற பதிவு செய்யப்படாத நிறுவனங்களிடம் இருந்து விமான டிக்கெட்டுகளை வாங்குவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என சிவில் விமான போக்குவரத்து அதிகார சபை கேட்டுக்கொண்டுள்ளது.
இது போன்ற மோசடி நிறுவனங்களைப் பற்றி அதிகார சபையிடம் அல்லது அவர்களின் நெருங்கிய பொலிஸ் நிலையத்தில் தெரிவிக்குமாறு CAASL மேலும் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.




Discussion about this post