புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற இம்முறை இலங்கையில் இருந்து 3500 பேருக்கு அனுமதி கிடைத்துள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
புனித ஹஜ் யாத்திரை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இவ்வாறு தெரிவித்துள்ளது.
இதற்காக சவுதி அரசாங்கத்துடன் எதிர்வரும் 9 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த முறையை போன்று வயது எல்லை தொடர்பிலான வரையறைகள் இம்முறை இல்லையெனவும் கொரோனா தடுப்பூசி தொடர்பிலான வரையறைகளும் இம்முறை தளர்த்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Discussion about this post