தனது மனைவியை கொலை செய்தபின் ‘கடவுள் கொலையை மன்னிப்பாரா’ என்று அந்த 28 வயது இளைஞர் கூகுள் செய்ததாகக் கூறப்படுகிறது.
கடந்த 2023ஆம் ஆண்டில் தனது மனைவியை கொன்று 200 துண்டுகளாக வெட்டிய இங்கிலாந்து இளைஞரின் கொடூர செயல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தனது மனைவியை கொலை செய்தபின் ‘கடவுள் கொலையை மன்னிப்பாரா’ என்று அந்த 28 வயது இளைஞர் கூகுள் செய்ததாகக் கூறப்படுகிறது.
குற்றம் சாட்டப்பட்ட நிக்கோலஸ் மெட்சன், உடல் உறுப்புகளை அப்புறப்படுத்த தனது நண்பருக்கு ரூ. 5,000 கொடுத்ததாக கூறப்படுகிறது. கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் மெட்சன், விலங்குகளையும் துன்புறுத்தியதாக தெரிகிறது. அவரது மனைவியின் செல்லப்பிராணிகளைக் கொன்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஹோலி பிராம்லி (26) திருமணமாகி 16 மாதங்களே ஆன நிலையில், தனது தாயிடம் பேசவோ, தனது குடும்பத்தினரிடம் பேசவோ மெட்சன் அனுமதிக்கவில்லை என தெரிகிறது. மேலும் கடந்தாண்டு தனது மகள் கொல்லப்படுவதற்கு முன் பிராம்லியும் மெட்சனும் விவாகரத்து பெற முடிவு செய்திருந்ததாக பிராம்லியின் தாய் கூறியிருக்கிறார். போலிஸாரின் கூற்றுப்படி, ஹோலி பிராம்லி காணாமல் போனதாகக் கூறப்பட்டபோது, லிங்கன்ஷைர் காவல்துறை அவர் காணாமல் போனது குறித்து விசாரிக்க தம்பதி தங்கியிருந்த பிளாட்டுக்குச் சென்றது. மனநல குழுவின் உறுப்பினர்களுடன் தனது மனைவி மார்ச் 19 அன்று வீட்டை விட்டு வெளியேறியதாக அதிகாரிகளிடம் மெட்சன் கூறியுள்ளார்.
பின்னர், படுக்கையறை தரையில் இரத்தக் கறை மற்றும் ரம்பம் ஆகியவற்றை போலீசார் கவனித்துள்ளனர். தீவிர விசாரணைக்குப் பின் மெட்சன் கைது செய்யப்பட்டார். அவரது கூகுள் ஹிஸ்ட்ரியை போலீசார் தேடியபோது, அதில் ‘இறந்த உடலை எப்படி அகற்றுவது’, ‘என் மனைவி இறந்தால் என்ன பலன் கிடைக்கும்’, ‘கடவுள் கொலையை மன்னிப்பாரா’ என்பன அடங்கியிருந்தன. அதுமட்டுமின்றி, மெட்சன் விலங்குகளையும் கொடூரமாக நடத்தியது விசாரணையில் கண்டறியப்பட்டது. டெய்லி மெயில் செய்தியின்படி, பிராம்லியின் செல்லப்பிராணிகளை மிருகத்தனமான வழிகளில் மெட்சன் கொன்றது அம்பலமாகியுள்ளது.
Discussion about this post