துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சின் கீழ் இயங்கும் வணிகக் கப்பல் செயலகத்தின் பொதுச் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
வர்த்தக மற்றும் கடல்சார் செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளது.இதன்படி, முதல் மாடி, பிரிஸ்டல் கட்டிடம், 43-48, யோர்க் வீதி, கொழும்பு – 1இல் அமைந்துள்ள Merchant Marine Secretariat அவசரத் தேவையின் காரணமாக தற்போதைய வளாகத்திலிருந்து வேறு கட்டிடத்துக்கு மாற்றப்பட உள்ளதால், பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் இன்று (10) முதல் 12 ஆம் திகதி வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்படும்.
எனினும், இணையத்தள சேவைகள் அவ்வாறே பேணப்படும் எனவும், www.dgshipping.gov.lk என்ற இணையத்தளத்துக்குச் சென்று சேவைகள் தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post