கஞ்சா கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் எத்திமலே பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.அண்மையில், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து சுமார் 650 கஞ்சா செடிகள் கண்டுபிடிக்கப்பட்டன.இதன்படி மொனராகலை பிரிவுக்கு பொறுப்பாக இருந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உட்பட 6 பேரை கைது செய்து எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.
Discussion about this post