ஈஸ்டர் தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் மீதான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தில் விளக்கமளிக்கவுள்ளார்.
நாளை (செவ்வாய்கிழமை) முதல் 20ஆம் திகதி வரை நாடாளுமன்றம் கூடவுள்ளது.
இந்தநிலையில், அந்தக் காலப்பகுதியில் அவர் விளக்கமளிப்பார் என தெரிவிக்கப்படுகிறது.
ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு 100 மில்லியன் ரூபாய் நட்டஈடு வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எனினும், அதனை செலுத்தும் அளவிற்கான சொத்து தம்மிடம் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.






Discussion about this post